இந்து கோவில் ஒன்றில் செருப்புக்காலுடன் அமீர்கான் உள்ளே சென்றதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பல இந்து அமைப்புகளிடம் இருந்து கண்டங்கள் எழுந்துள்ளன.

அமீர்கான் தற்போது அனுஷ்கா சர்மாவுடன் பி.கே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையின் நாசிக் அருகே உள்ள கலாராம் என்ற கோவிலில் நடந்து வருகிறது. இங்கு நடந்த படப்பிடிப்பிற்கு இன்று காலை வந்த அமீர்கான், செருப்பு காலுடன் கோவிலின் உள்ளே சென்றதால் கோவிலில் இருந்த பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களாக ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அமீர்கானுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து விமர்சனம் எழுந்துள்ளது. இதற்காக இன்னும் அமீர்கான் வருத்தம் தெரிவிக்கவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் உள்ள ஒருசில இந்து அமைப்புகள் அமீர்கான் மீது வழக்கு தொடர் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. ஏற்கனவே பி.கே படத்தின் போஸ்டர் ஒன்றுக்காக நிர்வாண போஸ் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top