கோவைக்காய் ,கோவை இலை மற்றும் கோவை பூ இவை அனைத்தையும் ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் எடுத்து அதில் தேவையான நீரை சேர்த்துக்கொள்ளவும் பிறகு அதை நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின் அதை வடிகட்டியால் வடிகட்டி நீரைமட்டும் எடுத்து சேகரித்து கொள்ளுங்கள். சுவைக்காக சிறிது தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். தேன் இல்லாதபட்சத்தில் சர்கரையை சேர்த்துக்கொள்ளலாம். இப்பொழுது வாய்ப்புண் டானிக் தயார். இதை சித்த வைத்தியத்தில் தீநீர் இறக்குவது என்று கூறுவார்கள்.

இந்த தீநீர் வயிற்றுப்புண் , வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக சிறந்த டானிக்காகும். சில நேரங்களில் மற்ற நோயின் காரணமாக மருந்துகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது வேறு சில காரணங்களால் நம் வாய் வெந்துபோய்விடும், அந்த சமயங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
தகவல் ஜீ தமிழ் பாரம்பரிய மருத்துவம்.

மேலே குறிப்பிட்ட தீநீர் செய்ய முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. கோவைக்காய் வெறும் பச்சையாகவே சாப்பிட்டாலேபோதும் வாய்ப்புண் விரைவில் குணமடையும். கோவை காயை பச்சையாக சாப்பிடுவதா என்று எண்ணவேண்டாம். கோவைக்காய் பச்சையாக சாப்பிட்டால் அசல் வெள்ளரி பிஞ்சு சுவையுடையது.

Advertisement

Next
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment

 
Top