ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன

நவகிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. அதன் விவரம் வருமாறு :
சூரியன் ....................ஆரோக்கியம், தலைமைப் பதவி.
சந்திரன் ...................கீர்த்தி, சிந்தனாசக்தி.
அங்காரகன் ............. செல்வம், வீரம்.
புதன் ....................... அறிவு, வெளிநாட்டு யோகம், நகைச்சுவை உணர்வு.
வியாழன் .................. நன்மதிப்பு, போதிக்கும் ஆற்றல்.
சுக்கிரன் ................... அழகு, அந்தஸ்து, நல்வாழ்க்கை.
சனி .......................... சந்தோஷம், ஆயுள் விருத்தி.
ராகு .......................... பகைவர் பயம் நீங்குதல், பண வரவு அதிகரித்தல்.
கேது ........................ குல அபிவிருத்தி.

பிள்ளையார் சுழி' (உ)

விநாயகரை வணங்காமல் எந்த பணியையும் தொடங்குவதில்லை. அதுபோல, "பிள்ளையார் சுழி' (உ)போட்டுத் தான், எதையும் எழுதத் தொடங்குவர். அந்தக் காலத்தில் "ஸ்ரீ கணாதிபதியே நம:' என்று சொல்லியோ எழுதியோ தான் தினசரி பணிகளை ஆரம்பிப்பது வழக்கம். இதனால், செயல்கள் தங்கு தடையின்றி எளிதாக நிறைவேறும் என்பது ஐதீகம். "சிவகணங்களின் தலைவனாக விளங்கும் கணபதியை வணங்குகிறேன்' என்பது இதன் பொருள்.

தர்மசங்கடம் என்பதன் பொருள் என்ன?

நம்மால் செய்யக் கூடியதை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு தடுப்பதே தர்மசங்கடம். சங்கடம் என்றால் "கஷ்டம்'. பசி ஏற்படும் போது சாப்பாடு கிடைக்காவிட்டால் கஷ்டம். சாப்பாடு இருந்தும் உண்ண வேண்டிய நேரத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வந்து பேசிக் கொண்டு இருந்தால் ஏற்படுவது தர்மசங்கடம். நல்லவர்களாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அவர்களுடன் இருக்கும் குணம் தர்மசங்கடம் என்று ராஜாஜி குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத்தக்கது.

இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தெய்வீக பரிகாரம்

தேய்பிறை அஷ்டமியில் அன்று 27 மிளகுகளை ஒரு புதிய வெள்ளை துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி கால பைரவருக்கு விளக்கேற்றிவர நாம் நினைத்தது நடக்கும் இழந்த அனைத்தும் திரும்ப வரும்

Advertisement

0 comments:

Post a Comment

 
Top