ஷங்கரின் ஐ தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு படம் வெளியாகப் போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளியை முதலில் ரிசர்வ் செய்தவர் ஹரி. தனது பூஜை படம் தீபாவளிக்கு வெளியாகும் என படத்தை தொடங்கும் போதே அறிவித்தார். அதையடுத்து கத்தி படமும் தீபாவளி ரிலீஸில் கலந்து கொண்டது. அடுத்ததாக ஐ.

மூன்று பெரிய படங்கள் ஒரே தினத்தில் வெளியாகிற அளவுக்கு தமிழகத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கை இல்லை. ஒரு படமாவது ரேஸிலிருந்து பின்வாங்கியாக வேண்டும்.

ஐ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் உள்ளது. ஒரு பாடல் காட்சியையும் படமாக்க வேண்டும். விஎஃப்எக்ஸ் பணிகளும் உள்ளன. இவற்றையெல்லாம் முடித்து படத்தை தீபாவளிக்கு கொண்டு வருவது சிரமமான விஷயம்.

அதனால் படம் தீபாவளிக்கு பிறகே வெளியாகும் என்கிறார்கள்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top