எந்திரன் இரண்டாம் பாகம் குறித்து கலவையான தகவல்கள். எந்திரன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் எடுக்கிறார் என்றும் எடுக்கவில்லை என்றும் அடுத்தடுத்து செய்திகள் வருகின்றன. ரஜினி நடிப்பாரா மாட்டாரா என்பது குறித்தும் பட்டிமன்றம் நடக்கிறது. இந்நிலையில் ஷங்கருக்கு நெருக்கமான வட்டாரம் கசியவிட்டுள்ள தகவல், எந்திரன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

எந்திரன் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்டை ஷங்கர் ஏற்கனவே முடித்துவிட்டாராம். படப்பிடிப்புக்கு செல்ல அவர் தயார். ஆனால் அதற்குமுன் பக்காவான டீம் அமைய வேண்டும். எத்தனை கோடி கேட்டாலும் சளைக்காமல் தருகிற தயாரிப்பு நிறுவனம், போடுகிற கோடிகளை திருப்பி எடுக்கிற ஸ்டார் வேல்யூ உள்ள நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் இத்யாதி...

ஐ வெளியானதும் எந்திரன் 2 வேலைகளில் ஷங்கர் இறங்க உள்ளார் என்பதே லேட்டஸ்ட் செய்தி. நடிக்கப் போவது ரஜினியா இல்லை வேறு நடிகரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top