தமிழ் நாட்டை சேர்ந்த வாழும் கணிதப் பேரறிஞர் ச.ர. சீனிவாச வரதன் (S.R.Srinivasa Varadhan) அவர்கள். தற்பொழுது அகவை 73. இவருக்கு அமெரிக்காவிலேயே உச்ச அறிவியல் பரிசாகிய தேசிய அறிவியல் பரிசை (National Medal of Science) 2010 இல் பராக்கு ஒபாமா அளித்தார். 2007 ஆம் ஆண்டில் இவர் புகழ்பெற்ற ஏபல் பரிசை (Abel Prize) வென்றார். மிகப்பல பரிசுகளை வென்ற மாபெரும்புகழாளர். நிகழ்தகவியல் (probability) துறையில் ஆழமான உண்மைகளை நிறுவியுள்ளார். சீருறா நிலையில் (random) இருந்து மிகவும் விலகி இருக்கும் நிலைகள் பற்றிய கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். இதனைக் கற்றை இயற்பியல் புலக்கொள்கை (Quantum Field Theory), நிதித்துறை, பொருளாதாராம், மக்கள் தொகைப் பரவல் போன்ற மிகப்பல துறைகளில் பயன்படுத்துகின்றார்கள். இவருடைய 1963 ஆம் ஆண்டு முனைவர் பட்ட நிலைநாட்டலுக்கு பெரும்புகழ் கொண்ட உருசிய அறிஞர் ஆந்தரேய் கோல்மோகொரோவே (Andrey Kolmogorov) நேரில் வந்து கேட்டாராம். இவர் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top