எஸ்.பி.ஜனநாதன் தான் இயக்கிவரும் புறம்போக்கு படத்தின் பெயரை புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று மாற்றியுள்ளார்.
பேராண்மைக்குப் பிறகு ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. ஆர்யா, விஜய் வேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பெயரை தற்போது புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று ஜனநாதன் மாற்றியுள்ளார்.
நம் நாட்டில் புறம்போக்கு என்று எதுவும் இல்லை. எல்லாமே பொது நிலம், மக்கள் நிலம். நாம்தான் நம் வசதிக்கேற்ப அதனை விளைச்சல் புறம்போக்கு, பாசன புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு என பிரித்து வைத்துள்ளோம். புறம்போக்கு என்றால் ஊருக்கு பொதுவான இடம் என்று அர்த்தம். அதனால்தான் தலைப்பை புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று மாற்றியதாக இயக்குனர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
புறம்போக்கு என்கிற பெயரை ஏற்கனவே ஒரு நிறுவனம் பதிவு செய்துள்ளது. அவர்கள் புறம்போக்கு என்ற பெயரை பயன்படுத்த அனுமதிக்கவில்லையென்றால் பெயரை மாற்றுவேன் என ஜனநாதன் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment