ஆவிகளை பற்றி சில தகவல்கள்

ஒவ்வொரு உயிருக்கும் சூட்சம தேகம் சூதல தேகம் என்று இரு வகையான உடல்கள் உள்ளன. ஸ்தூல தேகம் என்பது நம்முடை திட உடல். இந்த திட உடலுக்குள் நம் கண்ணுக்கு புலப்படாத ஸ்தூல தேகம் ஒன்று உள்ளது. இது ஒரு மிக நுண்ணிய படலம் இந்த ஸ்தூல தேகத்திற்குள்ளே நம் ஆன்மா உள்ளது. ஸ்தூல தேகம் நம்முடைய திட உடலை விட்டு பிரிவதையே மரணம் என்கிறோம். உடல் இல்லாத இந்த ஸ்தூல தேகத்தையே ஆவி என்கிறோம். நமது சித்தர்களும் ரிஷிகளும் உயிருடன் இருக்கும்போதே தன் ஆன்மாவை அரிந்து(தன்னை அரிதல்) ஸ்தூல தேகத்திலிருந்து பிரிந்து இறைவனுடன் கலந்து விடுகின்றனர் இதையே முக்தி அல்லது மரணம் இல்லா பெருவாழ்வு என்று கூறலாம்.

பல ஆசைகள் நிறைவேறாமலேயே இறப்பது அல்லது தற்கொலை அல்லது அகால மரணம் அடைபவர்கள் இறந்த பிறகும் தங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மற்றவர்களின் உடம்பில் புகுந்து தொந்தரவு செய்யவார்கள் இப்படிபட்ட ஆவிகளையே நாம் பேய் என்கிறோம்.

மனிதன் இறந்த பின்பு அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப்ப அவன் மூன்று விதமான ஆவி உலகங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறான். அவைகள் பாவலோக உலகம்,புண்ணியலோக உலகம் மற்றும் இவை இரண்டிருக்கும் இடைப்பட்ட உலகம். இப்படி பல உலகங்கள் வேவ்வேறு அதிர்வு நிலைகளில் இயங்கிக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை இந்த ஆவிகள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன, பிறகு ஆவிகள் மீண்டும் மறுபிறவி எடுப்பதாக கூறப்படுகிறது. நல்ல செயல்களை செய்து மரணித்த சில மனிதர்களின் ஆவிகள் பரிசுத்தமான ஆன்மாக்களாக கருதப்பட்டு இறைவனின் அருளால் மறு பிறவி இல்லாமல் இறைவனுடனேயே கலந்து மேல் நிலையை அடைந்து விடுவார்களாம்.

ஆவிகளின் உடல் மிக நுண்ணியது என்பதால் அது கற்றிலேயே மிதந்து செல்லும் தன்மையுடையது அதற்கு சுவர், மலை, நீர் என்று எந்த தடங்களும் கிடையாது ஆகையால் அவற்றின் ஊடே ஊடுருவி மிக எளிதாக கடந்து செல்லமுடியுமாம். ஆவியின் வேகமும் மனதின் வேகமும் ஒன்று. ஆவி எங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறதோ அடுத்த கனமே ஆவியால் அங்கு சஞ்சரிக்க முடியுமாம்.

புண்ணியம் செய்த பல ஆவிகள் மேல்நிலையை அடைந்து எதிர்காலத்தை சொல்லும் திறன் உடையதாக இருக்குமாம் ஆனாலும் அவைகளுக்கு அனைத்தையும் சொல்லும் உரிமை வழங்கப்படவில்லை. இந்த ஆவிகளின் தகவல்களை ஆவிகளிடம் பேசும் முறைகளை கையாண்டு சேகரிக்கப்பட்டதாக ஒரு புத்தகத்தில் நான் படித்தது

ஆவிகளின் ஸ்தூல தேகத்திலேயே முந்தய பல பிறவிகளின் நினைவுகள்,எண்ணங்கள் மற்றும் பாவ புண்ணியங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு சிலருக்கு அபூர்வமாக சில ஜென்மங்களின் நினைவுகள் வந்து விடுகின்றன இதை நாம் செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். மேலும் சிலர் ஆழ் தியானத்தில் இருக்கும் போது அவர்களின் மனத்திரையில் சில மனிதர்களின் முகம் சில ஊர்களின் இடம் தெள்த் தெளிவாக தெரியும் அதை இந்த ஜென்மத்தில் பார்தே இருந்திருக்க மாட்டார்கள் அவைகள் பூர்வ ஜென்மத்தில் அந்த மனிதனாகவோ பிறந்திருக்கலாம் அல்லது வேறு வகை தொடர்பு அவர்களிடம் இருந்திருக்கலாம். அந்த ஊர்களில் வாழ்ந்து வந்திருக்கலாம்.

நம்மை விட்டு மரணித்த உறவுகள் ஆவிகளாக திரியும் போது அவர்கள் நம்மிடம் பேச மிகுந்த ஆவல் கொண்டிருப்பார்களாம் ஆனால் அவர்கள் பேசினாலும் நம்மால் கேட்க முடியாது என்பது வேதனைக்குரியது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top